மாமல்லபுரம் கடற்கரை கோயிலை பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி !
தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தாருடன் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயிலை சுற்றிப் பார்த்தார்.;
தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற பின்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தாருடன் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயிலை சுற்றிப் பார்த்தார்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனிடையே தமிழகத்தின் 15வது ஆளுநராக ஆர்.என்.ரவி நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து குடும்பத்தாருடன் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு சென்று அங்குள்ள, புராதன சின்னங்களை பார்வையிட்டார். ஆளுநர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.
Source, Image Courtesy: Puthiyathalamurai