கோவை பட்டீஸ்வர் கோயிலில் ஆளுநர் சாமி தரிசனம்.. பசு, யானைக்கு உணவளித்து மகிழ்ந்தார்.!

கோவை பட்டீஸ்வர் கோயிலில் ஆளுநர் சாமி தரிசனம்.. பசு, யானைக்கு உணவளித்து மகிழ்ந்தார்.!

Update: 2020-12-17 12:35 GMT

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் இன்று மாலை 41வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். 

இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலையிலேயே ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விமானம் மூலமாக கோவைக்கு வந்தடைந்தார்.
கோவையில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு, அரசு விருந்தினர் மாளிகை தங்க வைக்கப்பட்டார். 

இதனிடையே, கோவையில் இருக்கும் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்று ஆளுநர் சாமி தரிசனம் செய்தார். ஆளுநர் வருகின்றதை முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் கோயிலுக்கு வந்தபோது போது அர்ச்சகர்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்று அழைத்து சென்றனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆளுநர், பிரகாரத்தை சுற்றி வரும் போது அங்கிருந்து பசு மாட்டிற்கு உணவு கொடுத்தார். அதோடு, கோயில் யானையிடம் ஆசி பெற்றார். ஆளுநரின் வருகையையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Similar News