ஹரிவராசனம் பாடலில் 108 வார்த்தைகள் இருப்பதால்தான் உயிரை காக்கும் ஆம்புலன்சுக்கு 108 பெயர் வந்தது: ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!

Update: 2022-06-12 11:36 GMT

ஹரிவராசனம் பாடலில் 108 வார்த்தைகள் இருப்பதால்தான் உயிரை காக்கும் ஆம்புலன்சுக்கு 108 பெயர் வந்தது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சபரி மாலா ஐயப்பா சேவா சமாஜம் நடத்திய ஹரிவராசனம் நூற்றாண்டு விழா தேசிய சமிதி விழா வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற ஆளுநர்கள் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஹரிவராசனம் பாடலில் 366 எழுத்துக்கள் உள்ளது. அதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் நம்மை பாதுகாக்கிறது.


மேலும், ஹரிவராசனம் பாடலில் 108 வார்த்தைகள் இருக்கிறது. இந்த 108 என்கின்ற இந்து மதம், புத்த மதம், யோக கலை உள்ளிட்டவைகளில் சக்தி வாய்ந்த எண்ணாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஆம்புலன்சுக்கு கூட 108 என்ற பெயர் வந்தது. மேலும், சபரிமலையில் இருக்கின்ற 18 படிகளைத் தாண்டினால் உடல் நலம், மனநலம் ஆகியவை மேம்படும் எனவும் அவர் கூறினார்.

Source: One India Tamil

Image Courtesy: Twitter

Tags:    

Similar News