காரைக்குடியில் அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டம்!
காரைக்குடியில் அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளரை தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காரைக்குடியில் அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளரை தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி பேருந்துகளை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்குவது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே கடந்த 25ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய அரசு போக்குவரத்து காரைக்குடி கிளை மேலாளர் சண்முகசுந்தரத்தை தனியார் ஓட்டுநர்களும், அதன் நேரக்காப்பாளரும் தாக்கியுள்ளனர்.
இது பற்றி 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில், மேலும் இருவரைக் கைது செய்யக்கோரி அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்காமல் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மணிநேரம் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தரப்பில் உறுதி அளித்த பின்னரே அரசு ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.
Source, Image Courtesy: Puthiyathalamurai