அரசு பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்தது - மோசமான நிலையில் அரசு பள்ளி கட்டிடங்கள், கவனிக்குமா அரசு?
சிங்கம்புனரி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரைப் பூச்சு பெயர்ந்து விழுந்தது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புூரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுராபுரி ஊராட்சியில் உள்ள வெங்காயம் பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 142 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். மூன்று கட்டிடங்கள் செயல்பட்டு வந்த இப்பள்ளியில் ஒரு கட்டிடம் பழுதானதால், மற்ற இரண்டு கட்டிடங்களில் வகுப்புகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால் வகுப்பு கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு கட்டிடம் பற்றாக்குறை இருப்பதாகவும் மாணவர்கள் கூறினார்கள்.
கடந்த ஒரு வாரம் காலாண்டு விடுமுறை காரணமாக பள்ளி மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இந்த வகுப்பு அறைக்கு சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் திறந்தனர். அப்பொழுது அறையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது ஆசிரியர் அமர்ந்திருக்கும் இடம் மற்றும் நாற்காலி உடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தகவல் கூறினார்கள்.
அதன் பெயரில் குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்காமல், அனைவரையும் வேறு இடத்திற்கு மாற்றம் செய்தனர். வட்டார கல்வி அலுவலகர் கலைச்செல்வி தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலகர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிகள் விரைந்து வந்து கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்டார். இது குறித்த மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர் கூறும் பொழுது பள்ளி வகுப்பறை கட்டிடத்தில் மேல் கூரை பெயர்ந்து விழுந்தது. ஆசிரியர் அங்கு இருந்து இருந்தால் விபரீதம் ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
Input & Image courtesy: Dinamalar