ஆசிரியரே இல்லாத அரசு பள்ளி... பொது தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள்... விடியா எதிர்காலம்!

25 ஆண்டுகளாக ஆசிரியர் இல்லாத அரசு பள்ளி, தவிர்க்கும் மாணவர்கள்.

Update: 2023-03-24 00:45 GMT

மதுரை விக்ரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக பொதுத்தேர்வு எதிர்கொள்ளும் பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களை இன்றி தங்களுடைய தேர்வுகளை எதிர் கொண்டு வருகிறார்கள். தற்போது தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பின்போது பிற்படுத்தோர் மற்றும் சிறுபான்மையினர் கைகளில் இருந்த அதிகாரம் தற்போது தமிழக பள்ளி கல்வித்துறைக்கு கிடைத்து இருக்கிறது. இப்பொழுது இந்த பள்ளிக்கு விடிவுகாலம் கிடைக்குமா? என்று பல்வேறு அரசு பள்ளி மாணவர்கள், மாணவிகள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி கலைப்பிரிவு மாணவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியர்களின்றி தேர்வெழுதி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் விக்கிரமங்கலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்குட்பட்ட அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து வருகிறார்கள். இது உயர்நிலை பள்ளியாக இருந்தது. 1997- 98 கல்வி ஆண்டில் தான் இது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.


தரம் உயர்த்தப்பட்ட பிறகு 12-ம் மற்றும் 11ம் வகுப்பு கலை பிரிவில் உள்ள மாணவ மாணவிகளுக்கு தற்போது வரை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. மாணவர்கள் தாங்களாகவே படித்து பொது தேர்வுகளை எதிர்கொண்டு வருகிறார்கள். வரலாறு, கணக்குப்பதிவியல், பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தி.மு.க ஆட்சியில் இதுவரை இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை, இனிமேலாவது தங்களுக்கு விடிவு காலம் பிறக்குமா? என்ற ஒரு எண்ணத்தில் மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News