சம்பளம் வாங்கி வீட்டில் உட்காந்து கொண்டு வேறு ஆள் வைத்து பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியை - பல் இளிக்கும் பள்ளிக்கல்வித்துறை லட்சணம்

அரசு பள்ளிகளில் வேலைக்கு வராமல் சம்பளத்துக்கு ஆள் வைத்து பாடம் நடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியை மீது குற்றம் எழுந்துள்ளது.

Update: 2022-10-05 12:45 GMT

அரசு பள்ளிகளில் வேலைக்கு வராமல் சம்பளத்துக்கு ஆள் வைத்து பாடம் நடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியை மீது குற்றம் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் உள்ள ஆலந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய கணித பட்டதாரி ஆசிரியர் ஒருவர் ஒன்னரை ஆண்டுகளாக வாரம் ஒரு முறை வருகை பதிவில் கையெழுத்து போட்டுவிட்டு வேலைக்கு வராமலே சம்பளம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. ஒன்னரை ஆண்டுகளாக வேலைக்கு வராத நிலையில் அவரது கணித பாடத்தை மாணவர்களுக்கு நடத்துவதற்காக தலைமை ஆசிரியையும் சம்பந்தப்பட்ட கணித ஆசிரியையும் சேர்ந்து தாங்களே ஒரு பட்டதாரி ஆசிரியை குறைந்த சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்தியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் வாரம் ஒரு நாள் பள்ளிக்கு வந்து அனைத்து நாட்களும் அணிக்கு வந்ததாக ஆசிரியர் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வீட்டுக்கு செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். இவருக்கு ஒவ்வொரு மாதம் சம்பளம் வழங்க அரசு அலுவலகத்திற்கு பச்சை மையில் கையெழுத்திட்டு தலைமை ஆசிரியை கடிதம் கொடுத்து வந்துள்ளார்.

அதே பள்ளியில் இன்னொரு ஆசிரியர் இரண்டு வாரங்களுக்கு வராமல் வருகை பதிவில் கையெழுத்து போட்டு வந்துள்ளார் அவருக்கு பதில் பாடம் நடத்துவதற்கு தற்காலிக ஆசிரியர் ஒரு பொறுப்பில் அமர்த்தி பாடம் நடத்தியுள்ளார்கள்.

இரண்டு ஆசிரியர்களும் விடுப்பு எடுக்காமல், துறையின் அனுமதி பெறாமல் வீட்டில் இருந்தவாறு அரசிடம் சம்பளம் பெற்று உள்ளனர். தலைமை ஆசிரியருடன் கூட்டு சேர்ந்த அரசு பள்ளியை தங்களை சொந்தமான பள்ளிக்கூடம் பாவித்து இஷ்டத்துக்கு வேலைக்கு ஆட்கள் வைத்து பாடம் நடத்தி உள்ளனர்.

இந்த விவகாரம் கடந்த வாரம் கசிந்த நிலையில் பள்ளி கல்லூரி அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை முடித்துள்ளனர், ஆசிரியர் உண்மைய ஒப்புக்கொள்ளும் ஆடியோ நகல் சமூகவலைதளத்தில் வைரலாகும் நிலையில் அடுத்த கட்ட விசாரணை குறித்து பள்ளித் கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.



Source - Dinamalar

Similar News