எங்களுக்கு எப்பொழுது விடிவு காலம் வரும்? போராட்டத்தில் இறங்கிய மின்சார ஊழியர்கள்!
மின்சார வாரிய பணியாளர்கள் போராட்டம் பொதுமக்கள் அவதி.
தி.மு.க தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்து தொடர்பான கோரிக்கைகள் முதல் முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது வரை பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மின்சார வாரிய பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் களம் இறங்கி இருக்கிறார்கள். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள் முத்தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றி கோரி, சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை மின்சார வாரியம் அலுவலகத்தில் இருந்து கோட்டை வரை ஊர்வலமாக செல்லும் போராட்டத்தை நேற்று நடத்தி இருந்தார்கள். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மின்சார வாரிய பொறியாளர்கள் ஊழியர்கள் கார்பனின் பஸ்களில் அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்தார்கள்.
பின் ஊர்வலமாக ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் அமைக்கப்பட்டிருந்த சாமியான பந்தலுக்கு சென்றார்கள். பின் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றப் பிறகு, தற்போது வரை மின்சார வாரியத்தில் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுடைய பல்வேறு கோரிக்கைகள் மீதும் வாரிய நிர்வாகம் பலமுறை அழைத்து பேசி ஒரு முடிவை எடுக்காமல் தட்டி கழித்து வருகிறது. தமிழக அரசு தற்போது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2018ம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி 230 அடிப்படையில் பதிவுகளை அனுமதிக்க வேண்டும். 56,000 காலி பணியிடங்களை நிரப்பி பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும். மேலும் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் மின்சார வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய உதவி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்கள் பேரணியை நடத்தி இருந்தார்கள். இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருந்தது.
Input & Image courtesy: News