நீங்கள் செய்தால் அது நியாயம், நாங்க கோ பேக் சொன்னால் கைதா? - ஹெச்.ராஜா ஆவேசம்?

கோ பேக் ராகுல் பிரச்சாரத்திற்கு சென்ற அர்ஜுன் சம்பத் கைது நடவடிக்கையை கண்டித்து ஹெச். ராஜா ட்விட்டர் பதிவு.

Update: 2022-09-08 02:14 GMT

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரில் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடைப்பயணம் தொடங்க உள்ளார். இந்த தருணத்தில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குறிப்பாக கன்னியாகுமரியில் வருகை தந்த ராகுல் காந்திக்கு எதிராக 'கோ பேக் ராகுல்' என்ற பிரச்சாரத்தில் கருப்புக்கொடி காட்டுவதற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்வதற்காக ரயில் பயணம் மேற்கொண்டார்.


நள்ளிரவில் அவர் பயணம் மேற்கொண்டு இருந்த பொழுது சுமார் நள்ளிரவு 12 மணி அளவில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அர்ஜுன் சம்பத் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தி.மு.க அரசின் கைது நடவடிக்கையை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் தற்போது சென்னையில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களும் தி.மு.க செய்தால் மட்டும் இது சரி, மற்ற கட்சிகள் செய்தால் அதற்கான கைது நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வியும் தற்போது கேட்டு வருகிறார்.


இந்த ஒரு செயலுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி அவர் கூறுகையில், "எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க மாண்புமிகு பிரதமருக்கு எதிராக கோ பேக் மோடி என்று கூறி கருப்புக்கொடி காட்டியது மற்றும் ராஜ் பவன் முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்தது. கருப்புக்கொடி பலூனை பறக்க விட்டது. ஆனால் ராகுல் காந்திக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட சென்ற அர்ஜுன் சம்பத் அவர்களை நள்ளிரவில் கைது செய்து கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டு உள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News