தேர்தல் எதிரொலி.. சென்னையில் 800 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைப்பு.!
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அனைவரும் காவல்துறையிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அனைவரும் காவல்துறையிடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் உரிமம் பெற்ற 800 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போன்று மீதமுள்ள 1,900 பேர் வாகுப்பதிவுக்கு முன்னதாகவே ஒப்படைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.