பொது நிகழ்ச்சிக்கு செல்வதை மக்கள் குறைத்துக்கொண்டால் கொரோனா முற்றிலும் குறையும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.!

பொது நிகழ்ச்சிகளில் மக்கள் சந்திப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அப்படி குறைத்துக்கொண்டாலே தொற்று பரவல் வேகம் குறைந்து விடும்.

Update: 2021-04-27 06:30 GMT

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர் கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.




 


இது பற்றி சென்னை தண்டையார்பேட்டையில் அவர் செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது: அடுத்த வரும் சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. குறிப்பாக நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள் வெளியே வரக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


 



பொது நிகழ்ச்சிகளில் மக்கள் சந்திப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். அப்படி குறைத்துக்கொண்டாலே தொற்று பரவல் வேகம் குறைந்து விடும். மேலும், கொரோனா வைரஸ் தொற்று ஒரு நாள் குறைந்ததை வைத்து கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என யாரும் அலட்சியம் செய்யக்கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News