பொதுமக்களின் பயத்தை போக்குவதற்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர்.!

பொதுமக்களின் பயத்தை போக்குவதற்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர்.!

Update: 2021-01-17 14:12 GMT

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 166 மையங்களில் நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் ஆகியோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக 55 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதனால் பொதுமக்களுக்கு தடுப்பூசி பற்றிய புரிதல் இல்லாமல் மற்றும் அவர்களுக்கு ஒருவிதமான அச்ச உணர்வுகளே வெளிப்பட்டு வருகிறது. எதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை நேரடியாக அரசு ஊழியர்களுக்கு மட்டும் போடுகிறார்களே என பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த அச்ச உணர்வுகளை போக்குவதற்காக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முன்கள பணியாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். 

இதன் மூலம், தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலர் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி குறித்து அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொண்ட பின்னரே பொதுமக்களுக்கு போடுவதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

Similar News