தமிழகத்தில் 2 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!

பனிகாலம் முடிவடைந்து வெயில் காலம் தொடங்க உள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று அல்லது நாளை வெப்பம் அதிகரிக்க தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-03-02 02:51 GMT

பனிகாலம் முடிவடைந்து வெயில் காலம் தொடங்க உள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று அல்லது நாளை வெப்பம் அதிகரிக்க தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 3 மாதங்களாக பனி வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது கோடைகாலம் தொடங்க உள்ளது. இதனால் உள்மாவட்டங்களில் இயல்பை விட சுமார் 6 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கக் கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வருகின்ற 5ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வறண்ட வானிலையே நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்க கடலில் இருந்து ஈரக்காற்று வீசுவதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Similar News