சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள் !

கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் துபாய், தோகா உள்ளிட்ட விமானங்கள் பெங்களூருவுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

Update: 2021-09-22 11:23 GMT

கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் துபாய், தோகா உள்ளிட்ட விமானங்கள் பெங்களூருவுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. அதே போன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

இதனால் கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து இன்று அதிகாலை 2.20 மணிக்கு வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் இடி, மின்னலுடன் பெய்த மழையால் சென்னையில் தரையிறங்க முடியால் அவதியுற்று வந்ததால், அந்த விமானத்தை பெங்களூருவுக்கு அதிகாரிகள் திருப்பி விட்டனர். இதனை தொடர்ந்து துபாயில் இருந்து 133 பயணிகளுடன் அதிகாலை 2.40 மணிக்கு சென்னை வந்த ஏர்லைன்ஸ் விமானமும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.

அதே போன்று துபாயில் இருந்து அதிகாலை 3.10 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் கொழுப்பில் இருந்து வந்த விமானம் ஆகியவை வானத்திலேயே வட்டமிட்டது. நிலைமை சீரானதும் விமானங்கள் திரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனிடையே மழை ஓய்ந்த பின்னர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விமானங்கள் வந்திறங்கியது. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்க முடியால் அவதியுற்றனர். அது மட்டுமின்றி உறவினர்களும் விமான நிலையங்களில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

Source: News 7 Tamil

Image Courtesy:Hiranandani Parks


Tags:    

Similar News