அடுத்த 2 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கனமழை ! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-08-12 12:30 GMT

தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்து வருகின்ற 2 மணி நேரத்திற்குள் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்குள் சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Source: Puthiyathalamurai.

Image Courtesy: skymet

https://www.puthiyathalaimurai.com/newsview/112718/Heavy-rain-chances-for-next-2-hours-in-some-TN-districts

Tags:    

Similar News