தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது ?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சற்று கூடுதலாக பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சற்று கூடுதலாக பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட பல மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழையால் இன்று (நவம்பர் 11) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் இன்று (நவம்பர் 11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நியைலில், அனைத்து நிலை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 11) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூடுதலான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதால் இன்று (நவம்பர் 11) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதே போன்று அருகாமையில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் இன்று (நவம்பர் 11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Source, Image Courtesy: Puthiyathalamurai