தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு.!
நிவர் புயலால் தமிழகத்தில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. வயல் வெளிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வாழை மரங்கள், தென்னை மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரிய அளவிலான இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதலமைச்சர் பேரிடர் நிவாரணம் உரிய முறையில் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
இந்நிலையில், நிவர் புயல் வலுவிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் தற்போது மேலும் வலுகுறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாகவும், இதனால் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.