தமிழகம், புதுச்சேரியில் கனமழை.. சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

தமிழகம், புதுச்சேரியில் கனமழை.. சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

Update: 2020-12-03 06:53 GMT

புரெவி புயல் காரணமாக சென்னை உட்பட பிற மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


இதனை தொடர்ந்து, சென்னை போரூர், கிண்டி, மதுரவாயல், ஆலந்தூர், பெரம்பூர் மற்றும் மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் சென்னையை அருகே உள்ள மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் போன்ற பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதாக வானிலை மையம் கூறுகிறது.


திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், சிவகங்கை, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்கால் பகுதியில் பலத்த காற்றுடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.


கடற்கரையை ஒட்டியுள்ள தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது புரெவி புயல் எச்சரிக்கை பகுதிகளான ராமேஸ்வரத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று ராமேஸ்வரம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், புயல் கூண்டு எச்சரிக்கையும் ஏற்றப்பட்டுள்ளது.

Similar News