தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை மையம் தகவல்.!

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை மையம் தகவல்.!

Update: 2020-12-18 07:57 GMT

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (18.12.2020) கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய ஆரம்பித்துள்ளது. ஒரு வாரத்துக்கு மேலாக தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இது பற்றி வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. 

இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களான விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Similar News