இந்த 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை.!
இந்த 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை.!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தற்போது மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் மற்றும் காரைக்காலிலும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.