குமரியில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்!

கன்னியாகுமரியில் பெய்த கனமழையால் தற்காலிக பாலம் ஒன்று மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

Update: 2021-09-28 09:17 GMT

கன்னியாகுமரியில் பெய்த கனமழையால் தற்காலிக பாலம் ஒன்று மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதில் களியல் 172 மி.மீ மழையும், குழித்துறையில் 151 மி.மீ., நாகர்கோவிலில் 117 மி.மீ. மழை என்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் ஜில்லென்று காட்சி அளித்தது.

தொடர்ந்து பெய்து வந்த மழையால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 44.37 அடி தண்ணீர் உள்ளது. பெருஞ்சாணி அணையில் 59.65 அடி தண்ணீர் உள்ளது. ஒரே நாளில் மாவட்டத்தில் நல்ல மழை பெய்ததால், குளங்கள், ஆறுகம், ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும், நாகர்கோயில் பழையாறு, இரணியல் வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.



இந்நிலையில், மழை காரணமாக திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் உள்ள பாறைகள் வெளியே தெரியாத அளவுக்குத் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் திற்பரப்பு அருவி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே, முத்துக்குழி, மாறாமலை போன்ற மலைப்பகுதியிலிருந்து பெருஞ்சாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிக்கு மழை பெய்த காரணத்தினால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்றது. இதன் காரணமாக அரசு ரப்பர் கழக குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் தற்காலிக பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த பாலத்தையும் மழை வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Vikatan


Tags:    

Similar News