தென்மாவட்டங்களில் கனமழை.. தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

தென்மாவட்டங்களில் கனமழை.. தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

Update: 2021-01-13 18:59 GMT

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்து ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகிறது. இதனால் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர் மழை காரணமாக தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி 400க்கும் மேற்பட்டவர்களை தேசிய பேரிடம் மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களில் அழைத்து சென்று தங்க வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 46 அடி கொள்ளளவு எட்டியுள்ளது. இதனால் அனையின் பாதுகாப்பை கருதி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதே போன்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றுக்கு 53,285 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனையடுத்து ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Similar News