சேலம் திம்மராய பெருமாள் கோவில்: 2 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!

சேலம் ஜாகிர் ரெட்டிபட்டியில் உள்ள திம்மராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இரண்டு கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது.

Update: 2022-12-13 14:01 GMT

சேலம் அருகில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இரண்டு கோடி மதிப்பிலான கோவில் நிலம் பல ஆண்டுகளுக்கு பின்னர் கண்டறிந்து அவற்றை மீட்க நடவடிக்கைகளை தற்போது அதிகாரிகள் மேற்கொண்டு இருக்கிறார்கள். சேலம் மாவட்டம் ஜாகீர் நாயக்கன்பட்டியில் நூற்றாண்டு பழமையான திம்மராய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஜாகிர் ரெட்டிபட்டியில் இடம் இருப்பதும், அந்த இடம் பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருவதாகவும் தெரிவித்தது.


இது குறித்து இந்த சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் கொண்டு மீட்பு நடவடிக்கை தொடங்கி இருக்கிறார். அறநிலைய உதவி ஆணையர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் திம்மராய கோவிலுக்கு சொந்தமான இடத்தை தற்போது கண்டறிந்து இருக்கிறார்கள். கோவிலுக்கு சொந்தமான 6200 சதுர அடி நிலம் சர்வ எண் 90 கண்டறிந்து அளவீடு செய்து கற்கள் நடப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில் வசிபவர்கள் இடத்தை காலி செய்ய ஒரு மாத காலம் அவகாசம் அளித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


எனவே கோவில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர்கள் அவர்களாகவே  காலி செய்ய முன்வரவில்லை என்றால், சட்டப்படி ஆக்கிரமிப்பு அகற்றும் நிலைமை செய்யப்படும் என்றும் இந்து சமய அறநிலை துறை சார்பில் கூறப்பட்டு இருக்கிறது. எனவே கோயில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர்களை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பிய நாளில் இருந்து ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News