உத்தரவை மீறி விழா குழு அமைத்த இந்து சமய அறநிலையத் துறை... உயர் நீதிமன்றம் கேள்வி..

நீதிமன்ற உத்தரவுகளை மீறி தனிப்பட்ட விழா குழுவை அமைத்த இந்து சமய அறநிலையத்துறை.

Update: 2023-06-07 03:47 GMT

மதுரை மாவட்டத்தின் அலங்கா நல்லுார் வெள்ளைகங்கை என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் பொது நல மனுவை தற்போது தாக்கல் செய்து இருக்கிறார். அலங்காநல்லுாரில் முனியாண்டி சுவாமி வகையறா கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழா ஏப்ரலில் நடந்தது. குழு அமைத்து விழா நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. குழுவில் ஆளும்கட்சியினர் இடம் பெற்றனர். ஒரு சிலரை மட்டும் முன்னிலைப்படுத்தும் வகையில் குழு அமைக்கப்பட்டது.


இதில் விதிமீறல் உள்ளது. ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு இருக்கிறது, உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராகத்தான் இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது இந்த ஒரு குழுவை நியமித்து இருக்கிறது. குழுவிற்கு தடை விதிக்க வேண்டும். மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமல் கோவில் செயல் அலுவலர் தலைமையில் விழா நடத்த மதுரை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.


அதில் நீதிபதிகள் சுப்பிரமணியன், அமர்வு நேற்று மீண்டும் இந்த வழக்கை விசாரித்தது. அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறும்போது, இதற்கு தனிப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் கோவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் காரணம் என்று கூறி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News