ஆவின் நிறுவனத்தின் மீது விழும் அடிக்கு மேல் அடி: உயர்நீதி மன்றத்தின் உத்தரவினால் பரபரப்பு!

ஆவின் நிறுவனத்தில் ஆள்சேர்ப்பு பணி நியமனங்களுக்கு உயர் நீதிமன்றம் தடை.

Update: 2023-03-31 00:30 GMT

ஆவின் நிறுவனம் மீது ஏற்கனவே தகுதி இல்லாத நபர்களை வேளையில் நியமனம் செய்தது, இதன் காரணமாக உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஆவின் பணியாளர்களின் பலரது நியமனங்களை ரத்து செய்தது. இந்நிலையில் பால்வளத்துறை ஆள்சேர்ப்பு வாரியத்தை ஏற்படுத்தும் வரை ஆவின் நிறுவனத்தின் பணி நியமனங்களுக்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. மதுரை, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஆவின் பணியாளர்கள் பலரது நியமனங்களை சமீபத்தில் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.


இது தொடர்பாக வெளிப்படையான தன்மை என்பது இந்திய அரசியலமைப்பின் தனி சிறப்பு. ஆனால் ஒரு நிறுவன நிர்வாகத்திற்குள் என்ன நடக்கிறது? என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் கீழ் அறிந்து கொள்ள முடியும். நிர்வாகம் சரியாக அமையாவிட்டால் சட்டத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பாதிக்கப்படும். எனவே கூட்டுறவு சங்கங்களின் பொது பணியாளராக ஆள் சேர்ப்பு வாரியம் அமைப்பது குறித்து அரசு பரிசோதனை செய்யும் நேரம் வந்துவிட்டதாக ஏற்கனவே உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.


இந்நிலையில் தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்யப்படாமல், ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டு வேலை பார்க்கும் ஊழியர்களின் நியமனத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்கள் பணிமுப்பு மூலம் மீண்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த விவகாரம் குறித்து மீன் மற்றும் பால்வளத்துறை மேம்பாட்டு துறை அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பால்வளத் துறை ஆள் சேர்ப்பு வாரியத்தை ஏற்படுத்தும் வரை பணி நியமனங்களுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News