தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் அபராதம்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்றால் நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை.

Update: 2023-03-01 23:55 GMT

தற்போது தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் என்று தான் பல்வேறு கோரிக்கைகள் எழப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது ராமநாதபுரத்தை சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு தாக்கல் செய்திருக்கிறார். குறிப்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவன பயிர் பலகைகள் தமிழில் தான் பெயர் எழுத வேண்டும். பிற மொழிகளை பயன்படுத்தி எழுதப்பட்டு இருந்தால் பெயர் பலகைகளில் தமிழ் பெரிய எழுத்துக்களில் எழுதிவிட்டு பிறமொழிச் சொற்களை சிறிய அளவில் பயன்படுத்தலாம் என்று அரசாணை 1987 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஆனால் அரசாணையில் குறிப்பிட்டதற்கு எதிராக அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெயர் பலகையில் ஆங்கில எழுத்துக்கள் பெரிதாகவும் தமிழ் எழுத்துக்களை சிறிய அளவிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தமிழ் மொழியை அவமதித்து வருகிறார்கள். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த அவமதிப்பு நடவடிக்கை குறித்து வழக்கு விசாரணை வந்தது. அரசு தரப்பில் இது குறித்து கூறுகையில், பெயர் பலகை வைக்காததற்கு 50,000 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், அவரது தொகையை உயர்த்தி அறிவிக்கும் படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Hindu News

Tags:    

Similar News