12,544 கிராமங்களில் அதிவேக இணையவசதி.. பாரத் நெட் திட்டத்திற்கு ரூ.351 கோடி நிதி ஒதுக்கிய அரசு.!
12,544 கிராமங்களில் அதிவேக இணையவசதி.. பாரத் நெட் திட்டத்திற்கு ரூ.351 கோடி நிதி ஒதுக்கிய அரசு.!
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் வகுப்பு, ஆன்லைன் வேலை என அனைத்து இண்டர்நெட் மையாக உள்ளது. இதனால் இணையத்திற்கான தேவை அதிகரிக்க தொடங்கி விட்டது. அதிலும் கொரோனா தொற்றுக்கு பின்னர் அதிகளவு இண்டர்நெட் பயன்படுத்திய நாடுகளில் பட்டியில் இந்தியாவும் உள்ளது. இதனால் மத்திய அரசு இணையத்திற்கு என்று சிறப்பு சலுகை மற்றும் நிதியை கூடுதலாக ஒதுக்கி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 544 கிராமங்களிலும் அதிவேக இணையவசதி அளிப்பதற்கான பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக 351 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக கடந்த ஆண்டு 1,871 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கருவிகள் கொள்முதல் ஒப்பந்தம் விடப்பட்டது. எனினும் ஒப்பந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் அதனை ரத்து செய்து, புதிய ஒப்பந்தம் கோர அனுமதி வழங்கியது.
இந்நிலையில், கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து பாரத் நெட் திட்டத்திற்கான தொகையை 2222 கோடி ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், 1815 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள தொகை மாநில அரசால் வழங்கப்படும்.