கல்குவாரி அமைக்க தவறான உரிமம் வழங்கிய அரசு அதிகாரிகள்... சரமாரி கேள்விகளைக் கேட்கும் நீதிமன்றம்!
விவசாய நிலங்களுக்கு மத்தியில் ஏன் கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது என நீதிமன்றத்தின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் மதுரை சென்னை கிளை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றே தாக்கல் செய்து இருக்கிறார். குறிப்பாக அந்த மனுவில் அவர் கூறுகையில், எங்கள் கிராமமான கல்லணையில் விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு அருகில் கல் குவாரி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. எனவே தனியார் நிலத்தை கனிம வள அதிகாரிகள் 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு இருக்கிறார்கள்.
இந்த குவாரிக்கு அனுமதி அளிக்கும் பொழுது கனிம வள சட்டத்தின் விதிமுறைகளுக்கு முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இதனால் கல்குவாரி அருகில் விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அதுமட்டுமில்லாமல் அருகில் உள்ள குண்டாறு பகுதியில் சட்டவிரதமாக ஆற்று மணல் அள்ளப்பட்டு வருகிறது என்றும் இதனால் இந்த பகுதி நிலத்தடி நீர்மட்டம் கேள்விக்குறியாகிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானம் இருக்கிறது. ஆனால் அதிகாரிகள் ஏன்? இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எதன் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி கொடுத்தீர்கள்? என்றும் இது குறித்து உடனடியாக மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News