3 மாதங்களில் 10 யானைகள் உயிரிழப்பு... தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் நீதிமன்றம் கேள்வி?
மின்வெளியில் சிக்கி யானைகள் பலியாவதை தடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு.
வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு பென்ச் விசாரணை நடத்தியது. இதில் விசாரணையின் போது மின்வெளியில் சிக்கி யானைகள் பலியாவதை தடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கிறார். ஆனால் அதே முறையாக அரசு அமல்படுத்தவில்லை என்பதால் வனத்துறை மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட்ட அவமதிப்பு வழக்கு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. குறிப்பாக பெரும்பாலான யானைகள் சாவிற்கு மின்சாரம் ஒரு காரணமாக இருக்கிறது, மின்சாரம் தாக்கி யானைகள் சாக வேண்டுமா? என்ற ஒரு கேள்வியையும் அரசிற்கு நீதிபதிகள் எழுப்பி இருக்கிறார்கள்.
இதற்கு முதன்மை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் வாணி ஆகியோர் நீரில் ஆஜராகி விளக்கம் அளித்து இருக்கிறார்கள். எனவே யானைகள் மின்சாரம் தாக்கி பலியாவதை தடுக்க சட்டம் சபையில் கொள்கை முடிவு வெளியிடப் பட்டிருக்கிறது. அதாவது யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து கூட்டு சோதனை நடத்துவது, தாழ்வான மின்கம்பங்களை, சாய்ந்த மின்கம்பங்களையும் சரி செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த பணிகள் ஓராண்டில் முடிக்கப்படும் என்று அரசு வக்கீல் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 79 யானைகள் பலியாகி இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பத்து யானைகள் பழியாகி இருக்கிறது. தடுப்பு நடவடிக்கைகள் அரசு இதுவரை எடுக்கப்படவில்லை எத்தனை யானைகள் பலியாக வேண்டும்? என்று கேள்வியை தமிழக அரசுக்கு நீதிமன்றம் முன் வைத்து இருக்கிறது.
Input & Image courtesy: Maalaimalar