CSI கிறிஸ்தவ அமைப்பிற்கு எதிரான வழக்கு - தமிழக அரசு விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த நபர்கள் சட்ட விரோதமாக அரசு நிலத்தை பயன்படுத்துவதாக வழக்கு.

Update: 2022-12-14 13:40 GMT

மதுரையில் தற்பொழுது அரசு கட்டுப்பாட்டில் கீழ் உள்ள நிலத்தை சி.எஸ்.ஐ.டி.ஏ மற்றும் சி.எஸ்.ஐ மதுரை ராமநாதபுர திருமண்டல நிர்வாகிகள் சிலர் சட்டவிரதமாக விற்பனை செய்வதாக தாக்கலான வழக்கில் தமிழக அரசு குறித்து விசாரணை பிறப்பிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டு இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கிறிஸ்தவ சீர்திருத்த இயக்க தலைவர் செய்வதாக தேவசகாயம் தாக்கல் செய்த பொது நல வழக்கில் தான் தற்பொழுது இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.


மதுரை தல்லாகுளத்தில் 31.10 ஏக்கர் நிலத்தை 1912இல் அமெரிக்க மிஷனரிகளின் அமெரிக்கன் போர்டு ஆப் கமிஷனர் பார் மெஷின் எனப்படும் ஏ.பி.சி.எஃப்.எம் வசம் ஒப்புதல் செய்தது. இதற்கு சந்தை மதிப்பு தொகையை செலுத்த வேண்டும் நிலத்தை தொழில் நடந்து பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.


இந்த நிபந்தனை மீறி நிலத்தை அரசு கையகப்படுத்தலாம், கிடைக்கும் வருவாய் அனாதை மற்றும் ஆதரவற்றோர் தொழில் பயிற்சி நிலையத்திற்கு பயன்படுத்துவது மற்றும் யுனைடெட் சர்ச் போர்டு சில சொத்துக்கள் சர்ச் ஆஃப் சவுத் இந்தியா டிரஸ்ட் அசோசியேசனக்கு சட்டவிரதமாக 1973 மாற்றப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அச்சொத்துக்களை அரசு மீண்டும் கையகப்படுத்த தவறிவிட்டது, அரசின் 31.10 ஏக்கர் நிலத்தை மீட்க கோரி வருவாய் துறை செயலாளர் நிர்வாக கமிஷனர் மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பி இருக்கிறார். மேலும் இவருடைய மனதை விசாரித்து நீதிபதிகள் அரசு தரப்பில் இந்த மனுவை விசாரித்து சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News