அவினாசி பெரிய கோவிலின் மீது தாக்குதல்.. அறநிலையத் துறையை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்..

அவிநாசி பெரிய கோவில் மீது நடந்த தாக்குதலை கண்டித்து இந்து முன்னணி மாபெரும் ஆர்ப்பாட்டம்.

Update: 2023-05-27 14:52 GMT

மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த பல்வேறு நபர்கள் இந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் கொட்டும் மழைக்கு கூட பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். 63 நாயன்மார்கள் சிலைகள் அருகே உள்ள சிலைகளை சேதப்படுத்த பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். பிரசித்த பெற்ற கோவிலின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.


தமிழகத்தில் உள்ள அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க பெருங்கருணை நாயகி- அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது என்று கூறப்பட்டு இருக்கிறது. இக்கோவிலில் கடந்த 22ஆம் தேதி இரவு புகுந்த நபர் அங்கிருந்த சிலைகள் மற்றும் உண்டியலை சேதப்படுத்தி கருவறைக்குள் புகுந்து பூஜை பொருட்களை தாறுமாறாக தூக்கி வீசி எரிந்துள்ளார்.


கோவிலுக்குள் புகுந்த சமூக விரோதிகள் மிகவும் பழமை வாய்ந்த 63 நாயன்மார்கள் சிலைகள் மற்றும் அருகே உள்ள சிலைகளை சேதப்படுத்த படுத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று இந்து முன்னணி சார்பில் கூறப்பட்டு இருக்கிறது. இதனை ஒட்டி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் மீது குறி வைத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்ற போதும், தற்போது வரை மேற்கண்ட சம்பவங்களில் ஒருவர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News