இந்துக்கள் மட்டுமே வசிக்கும் கிராமத்தில் 'சர்ச்' கட்ட முயற்சி: காவல் நிலையத்தில் புகார் அளித்த இந்து முன்னணி!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்குல் அருள்நத்தம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இந்துக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் ஆடுகளை வளர்ப்பது மட்டுமே இவர்களின் தொழிலாகும்.

Update: 2021-11-06 02:25 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்குல் அருள்நத்தம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இந்துக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் ஆடுகளை வளர்ப்பது மட்டுமே இவர்களின் தொழிலாகும்.

இந்நிலையில், அருள்நத்தம் கிராமத்தில் திடீரென்று கிறிஸ்துவ பாதிரியார்கள் அவ்வப்போது வலம் வருவதாக கூறப்படுகிறது. அங்குள்ள இந்துக்களை பணம், பொருள் தருவதாக கூறி மதம் மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக இந்துக்கள் மட்டுமே வசிக்கின்ற பகுதியில் திடீரென்று சர்ச் ஒன்றை கட்ட முயன்றுள்ளனர் கிறிஸ்துவ பாதிரியார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த அருள்நத்தம் கிராமத்தினர் மற்றும் இந்து முன்னணியினர் இது பற்றி தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் இந்துக்களை தவிர வேறு யாரும் வசிக்காத ஊரில் எதற்காக சர்ச் கட்டுகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News