பொருளாதார பாகுபாட்டை பக்தர்கள் மத்தியில் திணிப்பா? இந்து முன்னணி கண்டனம்....
தமிழகத்தில் உள்ள கோவில்களை தங்களுடைய கட்டுப்பாட்டின் இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது அதிகப்படியான பக்தர்கள் வருகை தரும் முக்கியமான கோவில்களில் கட்டணங்களை பெருமளவில் உயர்த்தி இருக்கிறார்கள். குறிப்பாக இலவச தரிசனம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில், 200 ரூபாயில் இருந்த 500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூல் செய்து சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பொருளாதார பாகுபாட்டை பக்தர்கள் இடையே இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்துவதாக இந்து முன்னணி சார்பில் குற்றம் ஒன்று சாட்டப்பட்டிருக்கிறது.
மேலும் இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் போது, "இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசாமி திருக்கோயிலில் காலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் என்பது வழக்கம். பல ஆண்டுகளுக்கு ₹10/- கட்டணமும், பிறகு ₹50/- கட்டணமும் பெறப்பட்டது. இதனை இந்துமுன்னணி நிறுவனர் மிகக் கடுமையாக எதிர்த்து போராடினார். இந்நிலையில் தற்போது பூஜைக்கு ₹200/- ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது 300% அதிகக் கட்டணம்.
இந்து சமய அறநிலைத்துறையின் பொருளாதாரப் பாகுபாட்டால் ஸ்படிகலிங்க தரிசனம் செய்ய முடியாமல் ஏழை எளிய பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை அனைத்து பக்தர்களையும் இலவசமாக ஸ்படிகலிங்க தரிசனத்தை காண அனுமதிக்க வேண்டும் என்று" இந்து முன்னணி கேட்டுக் கொள்ள பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News