இந்து பக்தர்களை முகம் சுழிக்க வைக்கும் செயல்.. கோவில் குளம் அருகில் பொது கழிவறையா?
கோவில் குளம் அருகில் அமைந்துள்ள பொது கழிவறையை அகற்றக் கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அளித்த இந்து முன்னணி அமைப்பினர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் தற்போது இந்து சமய அறநிலையத்துறையின் முக்கவாசி கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை குறிப்பாக கோவில் சொத்துக்களின் நிதி தன்னுடைய முழு ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது. ஆனால் கோவில் நடவடிக்கைகள் மற்றும் பிற செயல்களில் சற்று பின்னடைவாக தான் செயல்படுகிறது. கோவில்களில் வரும் வருமானம் மூலமாக கோவில்களுக்கு மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை செயல்பட வேண்டும்.
ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக கோவில்களின் சொத்துக்கள் மூலமாக எவ்வளவு நன்மைகளை பெறலாமோ அவ்வளவு நன்மைகளை பெறுகிறது. ஆனால் கோவில்கள் நலம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் என பல்வேறு விஷயங்களிலும் தாமதித்து வருகிறதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது நடந்திருக்கும் சம்பவமும் இந்து பக்தர்களின் மனதை வெகுவாக காயப்படுத்தி இருக்கிறது.
பெரும்பான்மையான இந்துக்களின் மனதையும், வழிபாட்டையும் கொச்சைப்படுத்தும் விதமாக, காட்டினாயனப்பள்ளி அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேய சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலின் குளம் இருக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பிட கட்டிடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கிருஷ்ணகிரி இந்து முன்னணி சார்பாக இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
Input & Image courtesy: Twitter