சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது - காரணம் என்ன?

சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் இருபத்தி ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-08-15 01:46 GMT

நெல்லை மாவட்டத்தில் தடைகளை மீறி தேசியக்கொடியுடன் மேலப்பாளையம் பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணியினர் குறிப்பாக அதற்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட நபர்கள் இருபத்தி ஏழு பேரையும் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். மேலப்பாளையம் பகுதிக்கு ஊர்வலமாக செல்லக்கூடாது என்று ஏற்கனவே தடை செய்யப்பட்டிரந்தது நெல்லை மாநகர காவல் ஆணையர் தேசத்துக்கு எதிராக செயல்படுவதாக இந்துமுன்னணி பரபரப்பு குற்றச்சாட்டு. நாட்டின் 65வது சுதந்திரதினத்தை கொண்டாடும் கொண்டு இருக்கும் இந்த வேளையில் அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடியை கட்ட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


எனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் தேசியக்கொடி விவகாரத்தை கையில் எடுத்து பல்வேறு வகையான நிகழ்வுகளையும் விழிப்புணர்வு மக்களுக்கு செய்து வருகிறார்கள். அதனைக் குறிக்கும் வகையில் நெல்லை மாவட்ட இந்து முன்னணி சார்பில் தேசிய கொடி ஏந்தி ஊர்வலமாக நெல்லை பாளையங்கோட்டை பகுதியிலிருந்து மேலப்பாளையம் பகுதிக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. பேருந்து நிலையம் வரை இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணியினர் தேசிய கொடி ஏந்தி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.


மேலப்பாளையம் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக தற்போது போலீசார் இந்த நிகழ்வை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். மேலும் போலீஸ் நடவடிக்கைக்கு மீறி ஊர்வலத்திற்கு சென்ற நபர்களை கைது செய்துள்ளார்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News