கோவில்களில் பயங்கரவாத சதித்திட்டம்... அதுவும் ட்ரோன் மூலமா. இந்து முன்னணி பகிர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருக்கும் கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தான் இந்து சமய அறநிலை துறையின் தலையாகிய பணி. ஆனால் அவற்றை காக்க இந்து சமூக அறநிலையத்துறை தவறவிடுவதாகவும் முழுமையான தங்களுடைய பணிகளை செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி சார்பில் கூறப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இந்து முன்னணி தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் இது பற்றி கூறும் பொழுது, உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து கோயிலுக்குள் செல்போன், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட எந்த விதமான பொருட்களுக்கும் அனுமதி இல்லை என விதிமுறைகள் விதிக்கப்பட்டது. பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்பதால் கோயில் கோபுரத்தின் மேற்பரப்பில் ட்ரோன்கள் இயக்குவதற்கு போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் நேற்று காலை, மேற்கு கோபுரத்தின் மேலே ட்ரோன் பறக்கவிடப்பட்டது இந்து விரோத திமுக அரசின் கையாலாகாதனத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
தமிழகத்தில் பலகோவில்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படும் வேளையில் இத்தகைய ட்ரோன் தாக்குதலை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இது ஆன்மீக அன்பர்கள் மனதில் பெருங்கவலையை ஏற்படுத்துகிறது. ஆகவே மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி தமிழகத்தின் ஆலயங்கள் பாதுகாத்திட முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News