இந்து சமய அறநிலையத் துறை கல்லூரிகளில் இந்துக்கள் மட்டுமே பணியாற்றுவதை எதிர்த்து வழக்கு - அதிரடி தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம்!

Hindu-only criteria for jobs in HR and CE college to stay

Update: 2021-11-27 04:30 GMT

இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் கொளத்தூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கும் பதவிக்கான தகுதி அளவுகோலானது, அரசியலமைப்பின் சில விதிகளுக்கு எதிரானது என்று மனுதாரர் கூறியிருந்தார். ஆனால், நீதிபதிகள் டி.ராஜா, டி.பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சேவை விவகாரங்களில் பொதுநல மனுக்களை அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

ஓய்வுபெற்ற இணைப் பேராசிரியர் கே.பாண்டியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்த நிபந்தனைகள் பிற மதத்தைச் சேர்ந்த தகுதியான நபர்களின் வாய்ப்பைப் பறிப்பதாகவும், இந்த நிபந்தனை அரசியலமைப்புச் சட்டத்தின் 16 (1) மற்றும் (2) விதிகளை மீறுவதாகும் என்றும் கூறினார். மதத்தின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடு மதச்சார்பின்மை என்ற கருத்தையும் புண்படுத்தும், என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் முத்குமார், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுவிட்டதாகவும், அதற்கான முழு நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும் பெஞ்சில் தெரிவித்தார். கல்லூரி சுயநிதி நிறுவனம் என்பதால் விண்ணப்பங்களை அழைப்பது மற்றும் பணியிடங்களை அறிவிப்பது போன்ற நடைமுறைகளை கல்லூரி பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் சமர்பித்தார்.



Tags:    

Similar News