மலை குன்று மீது பாதிரியார்கள் வைத்த சிலுவையை தூக்கியெறிந்து திரிசூலத்தை நட்ட இந்து முன்னணி: தருமபுரியில் அதிரடி!
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளி அடுத்த பஞ்சப்பள்ளி பட்டாபி நகர் பகுதியில் மலை குன்று அமைந்துள்ளது. இந்த மலைக் குன்றின் மீது கிறிஸ்துவ பாதிரியார்கள் சிலுவையை நட்டு வைத்து தினமும் ஜெபம் செய்து வந்துள்ளனர். இதனை அகற்றிவிட்டு இந்து முன்னணியை சேர்ந்த இளைஞர்கள் திரிசூலத்தை அங்கு நட்டு வைத்துள்ளனர்.

பட்டாபிநகர் மலை குன்றின் மீது அடவாடியாக கிறிஸ்தவ பாதிரியார்கள் அடிக்கடி வந்து ஜெபம் செய்வதாக இந்து முன்னணியினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட தலைவர் வடிவேல் தலைமையில் இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் மலைக்குன்றில் வைக்கப்பட்ட சிலுவையை அகற்றியுள்ளனர். இதன் பின்னர் இளைஞர்கள் கொண்டு சென்ற திரிசூலத்தை அங்கு நட்டு வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குன்றின் மீது காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்த இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்பதால் திரிசூலத்தையும், சிலுவையும் அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி இந்து முன்னணி நிர்வாகி கூறும்போது, மதம் மாற்று கும்பல்களின் அட்டூழியத்தை பாதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற மதமாற்றும் விஷம கும்பல்களை விரட்டியடிக்கவும் அவர்கள் சபதம் ஏற்றுள்ளதாக கூறியுள்ளனர்.
Source, Image: Kathirnews