பல ஆயிரம் கோடி வருவாய் வரும் அறநிலையத்துறைக்கு ரூ.340 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு: இந்துக்களை வஞ்சிக்கிறதாக தி.மு.க.!
திமுக அரசு இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்த்து போராட்டம் செய்தது மட்டுமின்றி வெளிநடப்பும் செய்தனர்.
நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்ஜெட் தாக்கலுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு வெறும் ரூ.340 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் ரூ.100 கோடி புராதான கோயில்களை சீரமைப்பதற்காகவும் கூறப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடிகள் வருவாய் வரும் இந்து சமய அறநிலையத்துறைக்கு வெறும் ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு என்பதை இந்துக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Source, Image Courtesy: Daily Thanthi