அம்மன் கோவில் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி?

பட்டாசு வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட பொறி அம்மன் கோவில் கோபுரத்தில் தீயை ஏற்படுத்தியது.

Update: 2022-11-22 02:39 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பத்ரகாளியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் கடந்த ஆறு மாதங்களாக கும்பாபிஷேகத்திற்கான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கோவில் கோபுரம் முழுவதும் பிளாஸ்டிக் அவர்கள் கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை அந்தப் பகுதியில் நடந்த சுப காரியம் ஒன்றிற்காக வந்த மக்கள் பட்டாசு வெடித்ததாக சொல்லப்படுகிறது.


மேலும் அந்த சரவெடி பட்டாசு ஒரு சில வெடிகள் கோபுரங்களை மறைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கவர் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தீ மல மலவென கோபுரம் முழுதும் பரவியது அதில் கட்டப்பட்டு இருந்த மரக்கட்டைகளிலும் தீப் பற்றியது. இதனால் தீ கோவில் கோபுரத்தில் கொழுந்து விட்டு இருந்தது. இது குறித்து உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கோவிலுக்கு சென்று தீயை அமர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.


ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அனைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் கோவில் கோபுரம் இருந்ததன் காரணமாக சிவகாசி பக்தர்கள் ஒரு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஒரு சம்பவம் ஏனெனில் ஒரு சில நாட்களில் அடுக்க இருக்கும் கும்பாபிஷேகம் இதனால் தடைபடுமா? என்று ஒரு கேள்வியும் எழுதுகிறது.

Input & Image courtesy: Oneindia News

Tags:    

Similar News