கோவில் பாதுகாப்பு உறுதி செய்ய தவறியது அறநிலையத்துறை: பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம்!

கோவில் பாதுகாப்பில் உறுதி செய்ய தவறிவிட்டதா தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை?

Update: 2023-01-20 03:12 GMT

இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு தேவையான தற்போது அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பில் கோட்டை விட்டு இருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் கூறியிருக்கிறார். குறிப்பாக அவர் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டம் மேலசேவல் கிராமத்தைச் சேர்ந்த இந்து சமூக அறநிலையத் துறையின் கோவில் ஊழியர் கிருஷ்ணன் என்பவரை கோவில் சுற்றி சுவரில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டி கேட்டதன் காரணமாக அவர் கோவில் வளாகத்திற்கு உள்ளையே கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.


கோவில்களில் நடக்கும் இத்தகைய முறைகேடுகளையும் சட்டத்திற்கு புறமான செயல்களையும் தடுக்க வேண்டிய இந்து சமூக அறநிலையத்துறை, கோவில் உண்டியல் பணத்தை மட்டும் தான் நோக்கமாக கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். மேலும் கோவில்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு பணி போன்றவை தற்போது செய்ய தவறிவிட்டதாக இந்து சமய அறநிலையின் துறையின் மீது தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். தமிழகம் முழுவதும் தற்போது சாராயக் கடைகளை திறந்து வைத்து இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதாகவும் அவர்கள் அதிகமான போதை பழக்கத்தின் காரணமாக இந்தமாதிரியான செயல்கள் புரிவதற்கு ஒரு தூண்டுகோல் ஆகவும் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


இனிமேல் குடும்ப நலனுக்காக வேலை செய்வதை மட்டுமே தன்னுடைய நோக்கமாக கொள்ளாமல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் கோவில் ஊழியர்களுக்கு உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். உயிரிழந்த கோவில் ஊழியர் குடும்பத்திற்கு ஸ்டாலின் தகுந்த நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது இரு மகன்களுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News