அமைச்சர் உதயநிதி தொகுதியில் தொடர்ந்து இடிக்கப்படும் இந்து கோவில்கள்: நீண்டு கொண்டு போகும் பட்டியல்!
அமைச்சர் உதயநிதி தொகுதிகளில் தொடர்ந்து இடிக்கப்படும் இந்து கோவில்கள்.
தி.மு.க அமைச்சர் உதயநிதி தொகுதிகளில் தொடர்ந்து இந்து கோவில்கள் மீது தாக்குதல்களும், இந்து கோவில்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி இடிப்புகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது. தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்துக்களுக்கு குறிப்பாக இந்து கோவில்கள் மீதான இடிப்புகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி தொகுதிகளில் அதிக அளவில் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட கொய்யா தோப்பு பகுதிகளில் தேவி கருமாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அமைச்சர் உதயநிதி தொகுதியில் உள்ள மற்றொரு கோவில் இடிக்கப்பட்டு இருப்பது அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இது குறித்து இந்து முன்னணி மாநில பொது செயலாளர், செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இது குறித்து தனது கண்டனத்தையும் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், வீடியோ காட்சிகளையும் பகிர்ந்து இருக்கிறார். சமூக வலைதளங்களில் அந்த ஒரு வீடியோ பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியிருக்கிறது. இதை பார்த்த இந்துக்கள் தி.மு.க அரசின் இந்து விரோத போக்கை கண்டித்து வருகிறார்கள்.
Input & Image courtesy: Mediyaan News