"நேதாஜி" என பெயர் கொண்ட சாலையை "தர்கா சாலை" என பெயர் மாற்றம் செய்வதா ? கொதித்தெழுந்த இந்து முன்னணி !
கிருஷ்ணகிரியில் "நேதாஜி" என பெயர்கொண்ட சாலையின் பெயரை "தர்கா சாலை" என்று மாற்றும் முயற்சில் நெடுஞ்சாலை துறை இறங்கியது. இந்து முன்னணி கண்டனம் தெரிவித்ததையடுத்து பெயர் மாற்றம் செய்யப்படாது என்று நெடுஞ்சாலைதுறை பதிலளித்துள்ளது.
கிருஷ்ணகிரியில், மாபெரும் சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரா போஸின் பெயரைக் கொண்ட "நேதாஜி" என ஒரு சாலை சுதந்திரம் பெற்றதிலிருந்து இருந்து வருகிறது. ஆனால் அந்த சாலைக்கு தற்போது நெடுஞ்சாலை துறையினால் "தர்கா சாலை" என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. " தர்கா சாலை " என்ற பெயர் பொருந்திய பலகையும் அந்த சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணி உடனடியாக கண்டனத்தை பதிவு செய்தது, அவர்கள் வெளியிட்ட செய்து குறிப்பில் : சுதந்திரம் பெற்றதிலிருந்து அந்த சாலைக்கு நேதாஜி சாலை என்று பெயர் இருந்தது தற்போது நெடுஞ்சாலை துறையினால் தர்கா சாலையாக மாற்றப்பட்டது இந்து முன்னணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக நெடுஞ்சாலை துறைக்கு கண்டனம் தெரிவித்து மனு கொடுக்கப்பட்டது இன்று இரவுக்குள் மாற்றி விடுவதாக உறுதி அளித்துள்ளனர்.
என்று கூறப்பட்டுள்ளது.