காளியம்மன் கோவில் அருகில் ஜெபக்கூடம் நிறுவுவதா ? இந்து முன்னணியின் அதிரடியால், திறக்க இருந்த ஜெபக்கூடம் மூடல் !

Update: 2021-12-03 12:51 GMT

சேலம் மாவட்டத்தில், காளியம்மன் கோவில் அருகில், புதியதாக தொடங்கப்பட  இருந்த  "கிரேஸ் அசம்பலி சபை" என்னும்  கிறிஸ்துவ ஜெபகூடம், இந்து முன்னணி அமைப்பினர் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில், சீலநாயக்கன்பட்டியில் பிரசத்திபெற்ற ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் இருந்து வருகிறது. இக்கோயிலில் அப்பகுதி இந்துக்கள் தினந்தோறும் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துவ மத மாற்ற கும்பலால், அக்கோயில் அருகில்  "கிரேஸ் அசம்பலி சபை"  என்னும் சட்ட விரோத ஜெபக்கூடம் நிறுவப்பட இருந்தது " கோயிலுக்கு அருகில் ஜெபக்கூடம் நிறுவுவதா ?" என   அப்பகுதி இந்து மத உணர்வாளர்கள் அதிருப்தியடைந்தனர். 

இந்நிலையில் இப்பிரச்னையை, இந்து முன்னணி கையில் ஏடுத்தது, விளைவு தற்பொழுது நிறுவப்பட  இருந்த அச் ஜெபக்கூடம் தடுத்து நிறுத்தப்பட்டது. இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட அறிவிப்பில் :

சேலம் சீலநாயக்கன்பட்டி அருள்மிகு ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் அருகில் புதிதாக திறக்க இருந்த கிரேஸ் அசம்பலி சபை எனும் சட்ட விரோத ஜெபக்கூடம் தடுத்து நிறுத்தம்.

என்று கூறப்பட்டுள்ளது. 

சமீப காலமாக,  இந்து விரோத முயற்சிகள்  எங்கெல்லாம் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் இந்து முன்னணி சென்று அம்முயற்சிகளை முறியடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  


Tags:    

Similar News