நீலகிரி : பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழாவில் இந்து மாணவிகளுக்கு பைபிள் விநியோகம் !

Update: 2021-12-24 09:00 GMT

நீலகிரியில் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவது என காரணம் காட்டி தலைமை ஆசிரியர் உதவியுடன் இந்து மாணவிகளுக்கு  பைபிள் வழங்கியது   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக கல்வி நிலையங்களில் பள்ளி மாணவர்களையும்,  கல்லூரி மாணவர்களையும் குறிவைத்து நேரடியாகவும், மறைமுகமாகவும்  கிறிஸ்தவ மதமாற்ற கும்பல்  சட்டவிரோத  மத மாற்ற வேலையை தீவிரமாக செய்து வருகின்றனர்   என்று குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இச் செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை ஜெல் மெமோரியல் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் எதிர் வரக்கூடிய கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு, மாணவிகளும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின்போது தலைமை ஆசிரியர் உதவியுடன் இந்து மாணவிகளுக்கு பைபிள் விநியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளது இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

நீலகிரி மாவட்டம் உதகை ஜெல் மெமோரியல் பள்ளியின் தலைமையாசிரியர் உதவியுடன் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு இந்து மாணவிகளை மத மாற்றம் செய்யும் முயற்சியில் பைபிள் கொடுத்துள்ளார்கள் இதைக் கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அவர்களிடம் இந்துமுன்னணி புகார் மனு.

தமிழகத்தில் பல இடங்களில் மத மாற்ற கும்பல்களின் தீவிர முயற்சிகளை இந்து முன்னணி அமைப்பு முறியடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News