பொது இடங்களிலும் மத மாற்ற கும்பலால் பைபிள் விநியோகம்: புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அனைத்து சர்ச் வாசலிலும் பகவத் கீதை வழங்க இந்துமுன்னணி முடிவு !

Update: 2021-12-24 14:37 GMT

உதகையில் நேற்று ஒரே நாளில் பள்ளி மற்றும் பேருந்து நிலையத்தில் கிறிஸ்துவ மத மாற்ற கும்பலால் இந்துக்களுக்கு பைபிள் வழங்கியதையடுத்து, சர்ச் வாசலில் பகவத்கீதை வழங்க இந்து முன்னணி  முடிவெடுத்துள்ளது.


நீலகிரியில் உதகை ஜெல் மெமோரியல் பள்ளியில் நேற்று கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவது என காரணம் காட்டி தலைமை ஆசிரியர் உதவியுடன் இந்து மாணவிகளுக்கு பைபிள் வழங்கப்பட்டது. 

அதே உதகையில் அதே தினத்தில்  குன்னூர் பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக நின்று கொண்டிருக்கும் இந்துக்களிடம் கிறிஸ்தவ மதமாற்ற கும்பல், பைபிள் விநியோகித்ததாக மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இச் செய்தி அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் சம்பவ இடத்திற்கு  விரைந்ததால் , பைபிள் விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து காவல் நிலயத்திடம் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்து இரு சம்பவம் ஒரே தினத்தில் நடந்தது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பு, கிறிஸ்துமஸ் தினத்தன்று   தேவாலயம் முன்பு இந்துக்களின் புனித நூலான கிதையை வழங்கப்போவதாக கூறியுள்ளது. இது குறித்து இந்து முன்னணி கூறியிருப்பதாவது :

நீலகிரியில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு கிறிஸ்தவர்கள் பள்ளி,கல்லூரி உட்பட அனைத்து இடங்களிலும் பைபிளும்,மதமாற்ற நோடீசும் விநியோகம்.புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை கிறிஸ்துமஸ் அன்று அனைத்து சர்ச் வாசலிலும் பகவத் கீதை வழங்க இந்துமுன்னணி முடிவு.

Tags:    

Similar News