சட்டவிரோதமாக குடியிருப்பு வீட்டை சர்ச் ஆக மாற்ற முயற்சி! இந்து முன்னணி முற்றுகை போராட்டம்!
கன்னியாகுமரியில் சட்டவிரோதமாக குடியிருப்பு வீட்டை ஜெபக்கூடமாக மாற்ற முயற்சி செய்யும் மதமாற்ற கும்பலை எதிர்த்து இந்து முன்னணி முற்றுகை போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தமிழகத்தில் பொது மக்களை கவரும் நோக்கில் கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் பொது இடங்களில் சட்டவிரோத மதமாற்ற செயலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. மூன்று நாட்களுக்கு முன்பு நீலகிரியில் பள்ளி மாணவர்களிடமும், பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடமும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மத மாற்றகும்பல் பைபிள்கள் விநியோகித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்.
தற்போது கன்னியாகுமரியிலுள்ள சந்தை பகுதியில் குடியிருப்பு வீடு ஒன்றை சர்ச் ஆக மாற்ற கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் முயற்சித்து வருவதாக அப்பகுதியில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இந்து முன்னணி இப் பிரச்சனையை கையில் எடுத்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்து முன்னணி முற்றுகை போராட்டம் நடத்தியதன் விளைவாக தாசில்தார் மற்றும் டி.எஸ்.பி பேச்சுவார்த்தை நடத்தி ஆர்.டி.ஓ விசாரணை முடியும் வரை ஜெப கூடம் நடத்த தடை விதிக்கப்பட்டது
இதுகுறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : குமரி-சந்தைவிளை பகுதியில் சட்டவிரோதமாக குடியிருப்பு வீட்டை சர்ச் ஆக மாற்ற முயற்சி.இந்துமுன்னணி நடத்திய முற்றுகை போராட்டம் காரணமாக தாசில்தார்,DSP பேச்சுவார்த்தை நடத்தி ஆர்டிஓ விசாரணை முடியும் வரை ஜெபகூட்டம் நடத்த தடை வித்த்தனர்.