தேர்வுக்கு சென்ற திருமணமான பெண்களிடம், தாலியை கழட்ட சொன்ன தேர்வு கண்காணிப்பாளர்! இந்து முன்னணியின் கண்டனத்தால் முடிவை திரும்பப்பெற்றார்!

Update: 2022-02-15 10:55 GMT

ராமநாதபுரத்தில் பட்டதாரி தேர்வுக்கு சென்ற பெண்களிடம் தாலியை கழட்ட கண்காணிப்பாளர் வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுப்பட்ட்ட நிலையில், இப்பொழுது இந்து முன்னணி கண்டனக்குரல் எழுப்பியதால்  தேர்வு கண்காணிப்பாளர் முடிவை திரும்பப்பெற்றதாக கூறப்படுகிறது. 


ராமநாதபுரம் மாவட்டத்தில், கீழக்கரையில், தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தேர்வுக்கு சென்ற திருமணமான இந்து பெண்களிடம், தேர்வு கண்காணிப்பாளர் "தாலி மற்றும் மெட்டியை கழற்றி விட்டு தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்" என்று கட்டளையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக் கடலை தேர்வு எழுத வந்த திருமணமான மாணவிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. பின்னர் மாணவிகள் தங்கள் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி தாலியை கழற்றி வைத்துவிட்டு தேர்வு மையத்திற்குள் நுழைந்தனர்.


தேர்வு மைய அதிகாரியின் செயலுக்கு இந்து முன்னணி அமைப்பு " தமிழர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் பாரம்பரியத்தை சிதைக்கும் வகையில் தாலியை கழட்ட கூறிய தேர்வு கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தன் கண்டனத்தை பதிவு செய்தது. இதன் எதிரொலியாக இன்று மாணவிகளை  எந்த நிபந்தனையும் கட்டளையும் இன்றி ,தேர்வு மையத்திற்குள் கண்காணிப்பாளர் அனுமதித்ததாக   கூறப்படுகிறது.



Tags:    

Similar News