மதுரை ஆதீனத்தை சந்தித்த இந்து முன்னணி தலைவர் !

Update: 2021-10-22 11:31 GMT

இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்  மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். 

கோயில் நகைகளை உருக்கும் தி.மு.க அரசை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் "மக்கள் விழிப்புணர்வு பிரசார யாத்திரை " நடைபெறுகிறது. இதனையொட்டி இந்துமுன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார். இது குறித்து இந்து முன்னணி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது :

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகளை‌ சந்தித்து நகையை உருக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நடைபெறுகின்ற மக்கள் விழிப்புணர்வு பிரசார யாத்திரை குறித்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் விளக்கி ஆசிகளைப் பெற்றார்.



கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை எதிர்த்து, இந்து முன்னணி முன்னெடுக்கும் பிரச்சாரங்களுக்கு பலதரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

Tags:    

Similar News