"தான்தோன்றி விநாயகர், வீர சக்தி ஆஞ்சநேயர் கோயில்களை இடிக்க முயலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் ! " - ஆர்ப்பாட்டம் அறிவித்தது இந்து முன்னணி !

Update: 2021-11-14 04:30 GMT

சிதம்பரத்தில் ஸ்ரீ  தான்தோன்றி விநாயகர் மற்றும் ஸ்ரீ வீர சக்தி ஆஞ்சநேயர் கோயில்களை  இடிக்க முயலும் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் சமீப காலமாக தொடர்ந்து இந்து கோயில் மற்றும் சாமி சிலைகள்  மர்ம கும்பலால் தாக்கப்பட்டு வருவது இந்துக்கள்  மத்தியில் மன வேதனையடைய செய்துள்ளது. இந்நிலையில் சிதம்பர உட்கோட்டத்தில்   விநாயகர் மற்றும் ஸ்ரீ வீர சக்தி ஆஞ்சநேயர் இடிக்க  மாவட்ட நிர்வாகம் முயல்வதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது : சிதம்பர உட்கோட்டத்தில் தொடர்ந்து இந்து  கோயில்கள் ஸ்ரீ தான்தோன்றி விநாயகர் மற்றும் ஸ்ரீ வீர சக்தி ஆஞ்சநேயர் கோயில்களை இடிக்க முயலும் மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக அரசையும் எதிர்த்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  16.11.2021  அன்று  காலை 10.00 மணி முதல்   12.00   மணி வரை. சிதம்பரம் சார் அலுவலகம் அருகில் நடைபெறுவதாக  கடலூர் மாவட்ட இந்து முன்னணி அறிவித்துள்ளது.


Hindu Munnani

 


Tags:    

Similar News